­

உங்களுக்கு தேவையான அனைத்து சாப்ட்வேர் களும் இங்கே இலவசமாக தரவிறக்கம் செய்யலாம் .மேலும் உங்களுக்கு தேவையான சாப்ட்வேர் பெயரை கருத்துகள் பகுதியில் குறிப்பிடுங்க .ஒரு வார காலத்தில் பதிவிடப்படும்.

இலவச photo edit மென்பொருள் Gimp new version 2.6.12 தரவிறக்கம் செய்ய..

கிம்ப் சில அடைப்படைகள் (Basic of GIMP): 

இந்த போட்டோ எடிட் மென்பொருளைத் தரவிறக்கும் முன்பு சில அடிப்படைகளைத் தெரிந்துகொள்வோம்.

போட்டோ எடிட் மென்பொருள்களில் சிறந்ததாக கருத்தப்படும் Photoshop மென்பொருளைப் போன்று பல விதங்களிலும் பயன்பாடுமிக்க மென்பொருள் இந்த கிம்ப் 2.6.12(GIMP OPEN SOURCE PHOTO EDIT SOFTWARE).

போட்டோஷாப்பில் உள்ள அனைத்து விருப்பங்களும்(Options,menu) இதிலும் உள்ளது. இது Open sources software என்பதால் இதை முற்றிலும் இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடியும்.

GIMP என்பதன் விரிவாக்கம் GNU Image Manipulation Program என்பதாகும். போட்டோஷாப் மென்பொருளின் மாற்றாக (Substitute)அமைந்த ஒரு சிறந்த மென்பொருள்தான் இந்த கிம்ப்.



போட்டோஷாப் மென்பொருளுக்கும், GIMP மென்பொருளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
போட்டோஷாப்பின் கோப்பு Extension .psd என முடியும். கிம்பின் கோப்பு வகை Extension XCF என முடியும்.

இதில் போட்டோஷாப் மென்பொருள் கோப்புகளை Gimp-ல் திறக்க முடியும். ஆனால் கிம்ப் மென்பொருளின் உதவியால் உருவாக்கப்பட்ட கோப்புகளை போட்டோஷாப் மென்பொருளில் திறக்க இயலாது. இந்த வகையில் கிம்ப் சிறப்பானது என்பதை அறியலாம்.

போட்டோஷாப்பில் உள்ள வசதிகள் ஒரு சில இவற்றில் இல்லையெனினும், முற்றிலும் இலவசம் என்பதால் பெரும்பாலானோரால் இம்மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இம்மென்பொருளைக் கொண்டு என்ன செய்யலாம்?
  • உங்கள் போட்டோக்களை எடிட் செய்து கொள்ளலாம்.
  • பலவித பார்மட்களில் படங்களை சேமித்துக்கொள்ளலாம். உதாரணமாக TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற பார்மட்களில் சேமித்துக்கொள்வதோடு இத்தகை கோப்புகளையும் திறந்து படங்களை எடிட் செய்யலாம். 
  • மேலும் Adobe Photoshop  documents, Autodesk flic animation , Corel Paint Shop Pro images போன்றவற்றையும் ஆதரிக்கிறது.
  • கிம்ப் மென்பொருளில் பல வசதிகள் அடங்கியிருக்கின்றன.  Filters, Brushes, selections, layer, masking tools, crop tool என்ற போன்ற கருவிகள் போட்டோஷாப்பில் உள்ளதைப் போன்றே இருக்கிறது. 
  •  48 வகையான பிரஷ்கள் பயன்பாட்டில் உள்ளன. 
  • இதில் வேண்டிய பிரஷ்ஷை நாமே உருவாக்கிக்கொள்ளலாம் , hard brush, soft brush, erased brush, மற்றும் வெவ்வேறு opacity கொண்ட தூரிகைகளையும் உருவாக்கிக்கொள்ளலாம்.
  •  இதில் கிரேடியன்ட்(Gradient)  சப்போர்ட் உள்ளது. 
  • RGB, HSV, color wheel , CMYK  போன்ற நிறங்களைக் கையாள முடியும்.  
  •  இதில் வட்ட வடிவ (Elliptical ), நீள் சதுரம்(Rectangle marquee tool),  ஆகிய கருவிகளைக் கொண்டு தேர்ந்தெடுத்தல்களை(selection) செய்யலாம்.
  • இண்டலிஜெண்ட் சிசர் (iScissors tool) கருவி கடின நிறமாற்றங்களை(hard color changes)  -ஐ குறிப்பதற்கான பகுதிகளுக்கிடையே தானாக பாதைகளை(automatic roots) உருவாக்கப் பயன்படுகிறது.
  • கிம்ப் பொதுவாக லேயர்களுக்கு(layers) துணைபுரிகிறது. இதில் ஒளிஊடுருவும் லேயரும் (layer's opacity)அடங்கும்.
  • அதாவது இந்த வகை லேயர்களை திரையில் காட்டுவதற்கும், மறைப்பதற்கும், ஒளி ஊடுருவும் தன்மைகொண்டதாகவும் மாற்ற முடியும்.
  • போட்டோஷாப்பில் உள்ளதைப்போன்றே channels படங்களுக்கு வேறுபட்ட நிறங்களைக் கொடுக்கிறது. 
  •  இம்மென்பொருளில் 150 க்கும் மேற்பட்ட எஃபக்ட்கள் (Effects), ஃபில்டர்கள்( Filter) அடங்கியிருக்கின்றன. 
  • முக்கிய எஃப்க்ட்களான Drop Shadow, Blur, Motion blur மற்றும் Noise ஆகியவை அடங்கியிருக்கின்றன.  
  • இதில் இருக்கும் ஸ்கிரிப்ட் Script-Fu என்பது. இது கிப்ம் பணிகளை செய்ய எழுதப்படும் ஒரு புரோகிராம் லாங்குவேஜ்- Programme language ஆகும். தமிழில் சொல்வதெனில் கட்டளை மொழி. 
  • Python, Perl, TCL போன்ற மொழிகளும்  வெளியிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.
  • இம்மென்பொருள் GPL license  கீழ் இலவச  மென்பொருளாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
                               தரவிறக்க செய்ய இங்கே கிளிக் செய்யவும் 
 இந்த பதிவு பிடிச்சிருந்தா உங்களது ஓட்டுகளை பதிவு பண்ணுங்க ,மறக்காம கருத்துகளையும் பதிவு பண்ணுங்க

4 comments:

  1. நண்பரே நல்ல பதிவு நண்பரே ................

  1. Unknown said...:

    ஹலோ நண்பா, பல வகையான குறைந்த அளவுள்ள compressed software, games, os போன்றவைகளை பதிவது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    மற்றும் என்னுடய blogக்கு விசிட் செய்யவும்.
    dailyonesoftware.blogspot.in

  1. ANBUTHIL said...:

    நல்ல பதிவு நண்பரே

Related Posts Plugin for WordPress, Blogger...